அஜர்பைஜான், அர்மீனியா மீண்டும் மோதல்

அஜர்பைஜான், அர்மீனியா மீண்டும் மோதல்

காஸ்பியன் கடலோரம் உள்ள அஜர்பைஜான் (Azerbaijan) நாடும், அதற்கு மேற்கே உள்ள அர்மீனியாவும் (Armenia) மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன. Nagorno-Karabakh மலைப்பகுதியில் இடம்பெறும் இந்த போருக்கு சுமார் 20 பேர் இருதரப்பிலும் பலியாகி உள்ளனர்.

மேற்படி மலை பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தம் என்றாலும் இங்கு கிறீஸ்தவ அர்மீனியரும், இஸ்லாமிய துருக்கியரும் இங்கு வாழ்கின்றனர். 1994 ஆண்டு முதல் உள்ளூர் அர்மீனியரே இந்த மலை பகுதியை தமது கட்டுப்பாட்டுள் வைத்துள்ளனர்.

ஞாயிறுக்கிழமை ஆரம்பித்த தற்போதைய சன்டைக்கு இருதரப்பும் மற்றைய தரப்பை காரணம் கூறுகின்றனர்.

துருக்கி அஜர்பைஜானுக்கு ஆதரவு வழங்குகிறது. துருக்கியின் தலையீட்டை கண்டிக்கிறது அர்மீனியா. அர்மீனியாவில் ரஷ்ய படை தளங்கள் உண்டு. உடன் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது ரஷ்யா.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களுக்கு சுமார் 200 பேர் பலியாகி இருந்தனர்.
சோவியத் காலத்தில் இப்பகுதி அஸிர்பையானுக்கு உரிய சுயாதீன பகுதியாக இருந்தது. சோவியத் வீழ்ச்சியின் பின் இங்கு மோதல்கள் ஆரம்பித்து இருந்தன.

1988 முதல் 1994 வரை அவ்வப்போது இடம்பெறும் யுத்தங்களுக்கு இங்கு 30,000 பேர் பலியாகி உள்ளனர்.