அமெரிக்காவில் 1-ஊசி கரோனா தடுப்பு மருந்து

அமெரிக்காவில் 1-ஊசி கரோனா தடுப்பு மருந்து

அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) இன்று சனிக்கிழமை Johnson & Johnson நிறுவனத்தின் கிளை நிறுவனமான Janssen தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தை அங்கீகாரம் செய்துள்ளது. ஏனைய கரோனா தடுப்பு மருந்துகள் 2 ஊசிகளை கொண்டிருக்க, Janssen மருந்து 1 ஊசியை மட்டுமே கொண்டுள்ளது. இந்த மருந்து சுமார் 66% வெற்றிகரமானது.

அமெரிக்காவில் அங்கீகாரம் பெறும் மூன்றாவது கரோனா தடுப்பு மருந்து இதுவாகும். ரஷ்ய, சீன மருந்துகள் அமெரிக்காவில் அங்கீகாரம் பெற இதுவரை விண்ணப்பித்து இருக்கவில்லை.

Janssen தடுப்பு மருந்து 2C முதல் 8C வரையான வெப்பநிலையில் சுமார் 3 மாதங்கள் வைத்திருக்கக்கூடியவை. அதனால் இதுவும் நடுத்தர மற்றும் வறிய நாடுகளுக்கு சாத்தியமான மருந்தாக அமையும்.

இந்த தடுப்பு மருந்தின் பெருமளவை ஏற்கனவே அமெரிக்கா (100 மில்லியன்), பிரித்தானியா (30 மில்லியன்), ஐரோப்பா (200 மில்லியன்), கனடா (38 மில்லியன்), Covax/WHO அமைப்பு (500 மில்லியன்) ஆகியன கொள்வனவு செய்ய அறிவித்து உள்ளன.