அமெரிக்காவை மீறி ஐரோப்பாவில் காலூன்றும் Huawei

Huawei

அமெரிக்காவின் ரம்ப் அரசு விதித்த கடும் தடைகளையும் மீறி ஐரோப்பாவில் காலூன்றுகிறது சீனாவின் Huawei என்ற தொழிநுட்ப நிறுவனம். அந்த வளர்ச்சியின் ஒரு படியாக ஐரோப்பாவில் தொழில்நுட்ப பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நிறுவி, “Made in Europe” தரத்திலான தயாரிப்புகளை செய்யவுள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளது Huawei.
.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறி அமெரிக்காவில் Huawei பொருட்களை தடை செய்த சனாதிபதி ரம்பின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் அவ்வாறு தடை செய்யும்படி கேட்டிருந்தது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் ரம்பை மீறி Huawei யை தமது 5G சேவையில் பங்குகொள்ள அனுமதித்து உள்ளன.
.
ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி பிரித்தானியாவும் Huawei தயாரிப்புகளை தமது 5G சேவையில் உள்ளடக்க தீர்மானித்து உள்ளது. பிரித்தானியாவின் தீர்மானம் ரம்பை விசனம் கொள்ளவும் செய்தது.
.
தற்போது Huawei ஐரோப்பாவில் உள்ள 23 ஆய்வு நிலையங்களில் சுமார் 13,000 பணியாளர்களை கொண்டுள்ளது. புதிய தயாரிப்பு நிலையம் மேலும் பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை வழங்கும்.
.
ஆனாலும் ஐரோப்பிய நாடுகளின் படைகள் உள்ள பகுதிகளிலும், மற்றைய முக்கிய இடங்களிலும் Huawei தனது தயாரிப்புகளை நிறுவ முடியாது.
.