அமெரிக்கா உலக யுத்தத்துக்கு தயார், குளிர் காலத்துக்கு தயாரில்லை

அமெரிக்கா உலக யுத்தத்துக்கு தயார், குளிர் காலத்துக்கு தயாரில்லை

பல்லாயிரம் அணுகுண்டுகள், ஏவுகணைகள் முதல் உலக யுத்தம் ஒன்றுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ள அமெரிக்கா தற்போது கடும் குளிரில் இருந்து தனது மக்களை பாதுகாக்க முடியாமல் திணறுகிறது. மக்களின் ஆவேசத்தில் இருந்து தம்மை பாதுகாக்க அரசியல்வாதிகளும், அரசியல் முற்றிய பத்திரிகையாளரும் அடுத்தவர்களை குற்றம் சாட்டியும் வருகின்றனர்.

Texas மாநிலத்து Ted Cruz என்ற Republican கட்சி செனட்டர் இடரில் இருந்து தப்பிக்க Cancun (மெக்ஸிக்கோ) நகருக்கு புதன்கிழமை குடும்பத்துடன் தப்பி ஓடியும் உள்ளார். பலரும் Cruz செயலை ஏளனம் செய்கின்றனர். அவர் விமான நிலையத்தில் இருந்ததை சிலர் படம் பிடித்து பரப்பி உள்ளனர். இவர் 2016ம் ஆண்டு சனாதிபதி போட்டியில் ஈடுபட்டவர்.

வழமைக்கு மிகையாக அண்மையில் Texas மாநிலம் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் வட மாநிலங்கள், அல்லது கனடா போன்ற இடங்களில் உள்ள குளிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் Texas மாநிலத்தில் அறவே இல்லை.

Texas மாநிலத்தில் முதலில் வீதி எங்கும் snow மற்றும் ice படிய ஆரம்பித்தது. பின் மின்சாரம் பல இடங்களில் அற்றுப்போனது. பல வீடுகள் 5 தினங்கள் வரை மின்சாரம் இல்லாது உள்ளன. நீர் குழாய்களில் நீர் ice ஆகி வெடிக்க ஆரம்பித்தன. பல மாடி வீடுகளின் குழாய்கள் வெடித்து, அந்த நீர் பின் உறைந்து ice ஆக மாறி உள்ளன. அதனால் நீரும் படிப்படியாக பல இடங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றது.

காற்றாடி மூலமான மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி, அணு மின் உற்பத்தி, diesel மூலமான மின் உற்பத்தி, இயற்கை வாயு மூலமான மின் உற்பத்தி எல்லாமே தடைப்பட்டு உள்ளன.

வீதிகள் கொள்கலன் போக்குவரத்துக்கு உகந்தது அல்ல என்பதால் எரிபொருள் (petrol) தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் பலசரக்கு பொருட்களுக்கும் தடுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.

Dallas பகுதில் உப்பு போடாத வீதி ஒன்றில் ice படிந்து, 155 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, 6 பேர் பலியாகி இருந்தனர்.

வரும் திங்கள் கிழமையே வெப்பநிலை 0C க்கு மேலே செல்லும். அதன் பின்னரே ice, snow உருகி நிலைமை படிப்படியாக வழமைக்கு திரும்பும்.

Texas மாநிலத்தில் வரலாற்றில் என்றும் இடம்பெற்றாத அளவு காப்புறுதி பணம் இம்முறை நட்டஈடுகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Texas மாநிலம் இலங்கையுடன் ஒப்பிடுகையில் 10.6 மடங்கு பெரியது.