அமெரிக்கா, சீனா நடுவில் நசியும் FedEx

FedEx

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இடம்பெறும் வர்த்தக போருள் தற்போது அகப்பட்டு நசிகிறது அமெரிக்காவின் பிரபல பொதிகள் பரிமாறும் நிறுவனமான FedEx.
.
Huawei என்ற சீன நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ரம்ப் அரசு, Huawei நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தக தொடர்புகளை கொண்டிருப்பதை தடை செய்தது.
.
இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள ஒருவர் அங்கு சட்டப்படி விற்பனை செய்யப்படும் Huawei P30 என்ற smart phone ஒன்றை அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு FedEx மூலம் அனுப்பி உள்ளார். அந்த phone அமெரிக்கா சென்று இருந்தாலும், பின்னர் FedEx அதை மீண்டும் பிரித்தானியா அனுப்பி அனுப்பியவரிடமே மீண்டும் கையளித்து.
.
இதனால் விசனம் கொண்ட சீனா FedEX நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. அதை விளக்க முடியாத FedEx தற்போது ரம்ப் தலையிலான அமெரிக்க அரசு மீது வழக்கு ஒன்றை தாக்குதல் செய்துள்ளது. நேற்று திங்கள் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கில், ரம்ப் அரசு நடைமுறைக்கு சாத்தியம் அற்ற சட்டத்தை தம் மீது திணித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
.
சீனாவில் பெருமளவு வர்த்தகம் செய்யும் FexEX, சீன தம்மை தடை செய்துவிடலாம் என்று பயப்படுகிறது.
.