அமெரிக்கா, தலிபான் 7-நாள் யுத்த குறைப்புக்கு இணக்கம்

Afhanistan

அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானின் தலிபானும் 7-நாள் யுத்த குறைப்புக்கு (reduction in violence) இணங்கி உள்ளனர். அந்த செய்தியை அமெரிக்காவின் பென்ரகன் அதிபர் Mark Esper இன்று வியாழன் தெரிவித்து உள்ளார். இது ஒரு யுத்த குறைப்பு மட்டுமே, யுத்த நிறுத்தம் அல்ல. அத்துடன் இந்த யுத்த குறைப்பு எப்போது ஆரம்பிக்கும் என்றும் கூறப்படவில்லை.
.
சுமார் 18 வருடங்களாக அமெரிக்கா தலிபானுக்கு எதிராக யுத்தம் செய்து வந்துள்ளது. ஆனாலும் அமெரிக்காவால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
.
அதேவேளை ரம்ப் அமெரிக்க படைகளை திருப்பி அழைக்க விரும்புகிறார். அதை அவர் வரும் நவம்பர் மாதம் நிகழ்வுள்ள சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செய்ய விரும்புவார். அதனால் தலிபானுடன் பேசுவதை தவிர அமெரிக்காவுக்கு வேறு வழி இல்லை.
.
அமெரிக்காவுக்கும், தலிபானுக்கும் இடையிலான பேச்சுக்கள் பொதுவாக கட்டாரின் (Qatar) தலைநகர் டோகாவிலேயே (Doha) இடம்பெறுகின்றன.
.
தற்போது சுமார் 13,000 அமெரிக்க படையினரும், சிறு தொகை NATO படையினரும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளனர்.
.