அமெரிக்க கூரையில் 18 அடி மலைப்பாம்பு

Python

அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் உள்ள Detroit நகரத்து வீட்டு கூரை ஒன்றில் தோன்றிய 18 அடி நீள மலைப்பாம்பு (python) அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Juliet என்ற பெயரை கொண்ட இந்த மலைப்பாம்பு ஒருவரின் வளர்ப்பு பிராணி என்பது பின்னர் தெரிய வந்துள்ளது.
.
உரிமையாளர் Devin Jones-White பாம்பின் கூட்டை முறையாக மூடாத நிலையிலேயே இந்த பாம்பு கூட்டைவிட்டு வெளியேறியுள்ளது. அதை அறிந்த சுற்றுப்புற நாய்கள் குறைக்க, பாம்பு கூரைக்கு எறியுள்ளது. அப்போது உரிமையாளர் தனது தொழிபுரியும் இடத்தில் இருந்துள்ளார். விசயத்தை அறிந்த உரிமையாளர் உடனே வந்து பாம்பை கூரையில் இருந்து மீட்டுள்ளார்.
.
இவ்வகை பாம்புகள் வடஅமெரிக்காவுக்கு உரியவை அல்ல. இவை தென்கிழக்கு ஆசியாவுக்கு உரியவை. வளர்ப்பு சூழலில் பிறந்த மேற்படி பாம்பு எப்போதுமே வளர்ப்பு பிராணியாகவே இருந்துள்ளது.
.
இவ்வகை பாம்புகள் மனிதர்களை குறிவைத்து கொலை செய்வது அரிது. ஆனால் மிரண்ட மலை பாம்புகள் சிலவேளைகளில் மனிதரை, குறிப்பாக சிறுவர்களை, நெரித்து கொல்வதுண்டு.

.