அமெரிக்க கொரோனா மரணம் திடீரென அதிகரித்தது

Coronavirus

அமெரிக்காவில் இன்று திங்கள் கொரோனா காரணமாக மரணித்தோர் தொகை தீடீரென அதிகரித்து உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 74 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் வைரஸ் தொற்றிக்கொண்டோர் தொகையும் 4,287 ஆக அதிகரித்து உள்ளது.
.
மரணித்தோருள் வாஷிங்டன் மாநிலத்தில் மரணித்த 48 பேரும், கலிபோர்னியாவில் மரணித்த 11 பேரும், நியூயார்க் மாநிலத்தில் மரணித்த 8 பேரும், பிளோரிடாவில் மரணித்த 5 பேரும் அடங்குவர்.
.
கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் தொகை 572 ஆக அதிகரித்து உள்ளது.
.
உலக அளவில் 181,000 இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியும், 7,100 பலியாகியும் உள்ளனர். அதேவேளை 78,000 குணமடைந்து உள்ளனர்.
.