அமெரிக்க-சீன தற்காலிக வர்த்தக உடன்பாடு

US_China

அமெரிக்காவும், சீனாவும் தற்காலிக வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் (Phase 1) இன்று புதன்கிழமை கையொப்பம் இட்டுள்ளன. அமெரிக்க சனாதிபதி ரம்பும், சீன அதிகாரி (Vice Premier) Liu He வும் இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர்.
.
சுமார் 18 மாதங்களுக்கு முன் ரம்ப் சீனா மீதான பொருளாதார யுத்தத்தை ஆரம்பித்து இருந்தார். சீனா வேறு வழியின்றி தன்வழிக்கு வரும் என்று ரம்ப்  கருதினார். ஆனால் பொருளாதார யுத்தம் ரம்பின் எதிர்பார்ப்புக்கு அப்பால் இழுபட்டு சென்றது. இருபகுதியும் பாதிப்பை அடைந்தன அனால் தீர்வு கிடைக்கவில்லை.
.
வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சனாதிபதி தேர்தல் காலம் வரை இந்த பொருளாதார யுத்தத்தை ரம்ப் நீடிக்க விரும்பவில்லை. அதனாலேயே அவர் ஒரு இடைக்கால உடன்படிக்கைக்கு முனைந்தார்.
.
இன்றைய இடைக்கால உடன்படிக்கை பாரிய, உறுதி செய்யக்கூடிய அங்கங்களை கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் ரம்ப் இந்த இடைக்கால உடன்படிக்கையை பெரு வெற்றியாக பிரச்சாரம் செய்ய பயன்படுத்துவர். அவரது ஆதவாளர்களும் மகிழ்ச்சி அடைவர்.
.