அமெரிக்க பொருளாதாரம் 4.85% வீழ்ச்சி

US_Commerce

இன்று புதன்கிழமை அமெரிக்காவின் Commerce Department விடுத்த அறிக்கையின்படி இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் (முதல் காலாண்டில்) அமெரிக்காவின் பொருளாதாரம் 4.85% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. உண்மையில் முதல் 2.5 மாதங்கள் நலமாக இருந்த பெருளாதாரமே இறுதியிலேயே பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
.
2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சியின் பின் ஏற்படும் பாரிய வீழிச்சி இதுவே.
.
தற்போது நடைபெறும் (ஏப்ரல் – ஜூன்) இரண்டாம் காலாண்டின் பொருளாதார வீழ்ச்சி மேலும் பாரதூரமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. Oxford Economics பொருளியலாளர் Gregory Daco மேரிக்காவின் இரண்டாம் காலாண்டின் பொருளாதார வீழ்ச்சி 12% ஆக இருக்கும் என்று கணிப்பிட்டு உள்ளார்.
.
பெருமளவு மக்கள் வீடுகளுள் முடங்கி இருப்பதுவே இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். வீடுகளுள் முடங்கி இருப்போரும், தமது தொழில்களை இழந்தோரும் தமது செலவுகளை குறைத்து கொண்டுள்ளனர். அதனால் உற்பத்தியும் குறைந்து உள்ளது.
.
முதலாம் காலாண்டில் அமெரிக்க மக்களின் உணவு கொள்வனவு, விடுதிகளில் தங்குதல் போன்ற செலவுகள் 705 ஆல் குறைந்து உள்ளது. ஆடை, காலனி போன்றவற்றின் கொள்வனவு 40% ஆல் குறைந்து உள்ளது.
.