அமெரிக்க Mallலில் சூட்டு சம்பவம், பலர் பலி

USFlag

அமெரிக்காவின் எல் பாசோ (El Paso) நகரில் இன்று சனிக்கிழமை சுமார் 10:00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பலர் பலியாகியும், பலர் காயமடைந்தும் உள்ளனர். El Paso நகரம் அமெரிக்காவின் ரெக்சஸ் (Texas) மாநிலத்தின் மெக்ஸிகோ எல்லையோரம் உள்ளது.
.
NBC News குறைந்தது 19 பேர் பலியாகி உள்ளதாகவும், 40 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் போலீசார் இதுவரை உத்தியோகபூர்வ எண்ணிக்கைகளை அறிவிக்கவில்லை. அத்துடன் டாலஸ் (Dallas) நகர் பகுதியை சார்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
.
இந்த சூட்டு சம்பவம் Cielo Vista Mall பகுதியில், Walmart க்கு அண்மையில் இடம்பெற்று உள்ளது. இந்த mall மெக்ஸிகோவுக்கு அண்மையில் உள்ளதால் பல மெக்ஸிகோ நாட்டவரும் எல்லை கடந்து இங்கு பொருட்களை கொள்வனவு செய்வதுண்டு.
.