அளவுக்கு மிஞ்சி வளர்ந்து அழியும் China Evergrande

அளவுக்கு மிஞ்சி வளர்ந்து அழியும் China Evergrande

அண்மை காலங்களில் உலகம் எங்கும் மக்கள் வீட்டு கொள்வனவுகளை முதலீட்டு வழியாக (investment vehicle) பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வீடு மற்றும் condo கட்டுமானம், கொள்வனவு எல்லாம் அளவுக்கு மிஞ்சி வளர்ந்துள்ளது. தேவைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி சில இடங்களில் பாரிய இழப்புகளுக்கு காரணமாகி வருகிறது.

தற்போது சீனாவின் China Evergrande என்ற நிறுவனம் பலரின் முதலீடுகளையும் அழித்து, தானும் அழியக்கூடும் என்ற நிலையில் உள்ளது.

1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட China Evergrande என்ற வீடு கட்டுமான நிறுவனம் அளவுக்கு மிஞ்சிய வளர்ச்சியை அடைந்து இருந்தது. இது விரைவில் சீனாவின் இரண்டாவது பெரிய கடுமையான நிறுவனமானது.

இதனிடம் சுமார் 200,000 ஊழியர்கள் உண்டு. இது இதுவரை 900 வர்த்தக, குடியிருப்பு, பொது கட்டுமான வேலைகளை செய்து இருந்தது. ஆனால் இது தற்போது $305 பில்லியன் கடனில் உள்ளது.

மிகையாக கட்டிய வீடுகளை விற்பனை செய்யாத நிலையிலும், Evergrande தொடர்ந்தும் பல அடுக்கு மாடிகளை கட்டி வந்தது. கையில் பணம் இல்லாத நிலையில் புதிய வீடுகளுக்கு செலுத்தப்படும் முதல் (down payment) பழைய செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த நிறுவனம் முறிந்தால், down payments மீள பெற முடியாது போகும்.

இந்த குளறுபடிகளை அறிந்த சீனா அரசு இந்த நிறுவனம் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதன் வரவு, செலவுகளையும் அரசு கண்காணித்து வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் வழங்கியோரும் தமது பணத்தை இழக்க நேரிடலாம். அத்துடன் சுமார் 128 வங்கிகளும், 121 முதிலீட்டு நிறுவனங்களும் Evergrande நிறுவனத்துக்கு கடன் வழங்கி உள்ளன.

இந்த நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு (stock) கடந்த 14 மாதங்களில் 90% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.