அஸ்ரேலிய படைகள் 39 ஆப்கான் அப்பாவிகளை கொன்றன

அஸ்ரேலிய படைகள் 39 ஆப்கான் அப்பாவிகளை கொன்றன

2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அஸ்ரேலிய விசேட படைகள் குறைந்தது 39 அப்பாவிகளை கொலை செய்துள்ளன என்று அஸ்ரேலிய ஜெனரல் Angus Campbell இன்று வியாழன் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக செய்யப்பட்ட விசாரணைகளின் பின்னான அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது.

கொலைகள் மூலம் வெற்றியை தேடும் “toxic competitiveness” மனநிலை கொண்ட விசேட படைகளான SAS மற்றும் Second Command Regiment இரண்டுள்ளும் ஓழுக்க கட்டுப்பாடு முறிந்து இருந்ததாக ஜெனரல் கூறியுள்ளார். அத்துடன் புதிதாக வரும் படையினர் என்றைக்குமே கொலை செய்யாது இருந்தால் அவர்களை கைவசம் உள்ள கைதிகளை கொலை செய்ய அழுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அஸ்ரேலிய படைகளால் சட்டத்துக்கு விரோதமான முறையில் கொலை செய்யப்பட்டவர்களில் 19 பேர் இளம் வாலிபர் (adolescent men) என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் யுத்தம் நடைபெறாத நேரங்களிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி படுகொலைகளால் விசனம் கொண்ட சில படையினர் பத்திரிகைகளுக்கு வழங்கிய செய்திகளின் அடிப்படையிலேயே மேற்படி விசாரணை ஆரம்பமாகி இருந்தது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் ஜெனரல் Campbell கூறியுள்ளார்.

படுகொலைகளுக்கு காரணமான SAS என்ற விசேட படையும் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.