ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் குண்டுக்கு 37 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் குண்டுக்கு 37 பேர் பலி

ஆப்கானித்தானின் Kandahar நகரில் உள்ள Bibi Fatima என்ற சியா இஸ்லாமியரின் பள்ளிவாசல் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு குறைந்தது 37 பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 70 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

தொழுகை நேரத்தில் முதலில் ஒரு குண்டு வாசலில் வெடித்ததாகவும், பின்னர் மேலும் இரண்டு குண்டுகள் உள்ளே வெடித்ததாகவும் கூறப்படுகிறது. வழமையாக இந்த பள்ளிவாசலில் சுமார் 500 பேர் தொழுகையில் ஈடுபடுவது வழமை என்று கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கூறாவிட்டாலும், இங்கு இயங்கும் IS-K மீதே சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையும் Kunduz மாகாணத்தில் இன்னோர் சியா இஸ்லாமிய பள்ளிவாசலில் IS-K செய்த தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றுக்கு 50 பேருக்கு மேல் பலியாகி இருந்தனர்.

சுனி இஸ்லாமிய IS-K குழுவும், தலிபானும் பரம எதிரிகள்.