இந்தியர்களை அழைத்துவர 60 விமானங்கள் பயணம்

AirIndia

கரோனா காரணமாக 12 நாடுகளில் முடங்கி இருக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்தியா 60 விமானங்களை அனுப்பவுள்ளது. இந்த மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலத்தில் மேற்படி முடங்கி உள்ள இந்தியர் இந்தியாவுக்கு எடுத்துவரப்பட உள்ளனர்.
.
மேற்படி 60 விமானங்களும் சுமார் 15,000 இந்தியர்களை 12 நாடுகளில் இருந்து அழைத்துவரும். அவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), குவைத், ஓமான், கட்டார், சவுதி, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் முடங்கி உள்ளனர்.
.
அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், மலேசியா போன்றா நாடுகளில் முடங்கி உள்ளவர்களும் இந்தியாவுக்கு மீட்கப்படுவர்.
.
இவர்களின் மீட்ப்பு செலவை அரசு செலுத்துமா, அல்லது நாடு திரும்புவோர் செலுத்துவரா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
.
தற்போது சுமார் 17 மில்லியன் இந்தியர்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளிநாடுகளில் தங்கி உள்ளனர். அவர்களில் சுமார் 1 மில்லியன் பேர் திரும்பி இந்தியா செல்ல விரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது.
.