இந்தியாவில் மின்னலுக்கு 120 பேர் பலி

India

இந்தியாவின் வட மாநிலங்களான பீஹார் மற்றும் உத்தர பிரதேசம் உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக தாக்கிய மின்னல்களுக்கு குறைந்தது 120 பேர் பலியாகி உள்ளனர்.
.
உத்தர பிரதேச அதிகாரி Aditi Umrao விடுத்த அறிக்கையின்படி அங்கு 24 மணித்தியாலங்களில் குறைந்தது 24 பேர் மின்னலுக்கு பலியாகி உள்ளனர்.
.
அருகில் உள்ள பீஹார் மாநிலத்தில் வியாழன் இடம்பெற்ற மின்னல் தாக்குதல்களுக்கு குறைந்தது 95 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள Gopalgani என்ற பகுதியில் மட்டும் 13 பேர் பலியாகி உள்ளனர்.
.
மிகையாக மன்சூர் மழை கிடைக்கும்போது கமக்காரர்கள் வயல்களுக்கு செல்வதாலேயே பலியானோர் தொகை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மரங்களுக்கு கீழே பாதுகாப்பை தேடுவது அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது.
.
2018 ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 2,300 பேர் மின்னல்களுக்கு பலியாகி உள்ளனர்.
.