இந்தியாவுக்கு அமெரிக்காவின் THAAD ஏவுகணைகள்?

S-400

அமெரிக்கா தனது Terminal High Altitude Area Defense (THAAD) என்ற ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளது. ஏற்கனவே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 வகை ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முன்வந்திருந்த நிலையிலேயே அமெரிக்கா S-400 ஏவுகணைகளுக்கு பதிலாக தனது THAAD ஏவுகணைகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
.
S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா சில தடைகளை விதித்து வந்திருந்தது. ஆனால் இந்தியா ரஷ்யாவின் S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முனைந்தபோது இந்தியாவுக்கு தனது தடையில் இருந்து விதிவிலக்கு அளித்து இருந்தது. தற்போது தனது ஏவுகணைகளை கொள்வனவு செய்யும்படி இந்தியாவை கேட்கிறது அமெரிக்கா.
.
இந்த ஏவுகணைகளின் விலைகள் கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஏற்பவும், கொள்வனவு அளவுகளுக்கு ஏற்பவும் மாறும் என்றாலும் பொதுவாக அமெரிக்காவின் THAAD ஏவுகணைகள் விலை அதிகமானவையே.
.
ஒரு ஏவு கருவியையும் (battery), 6 ஏவுகணைகளும் (launchers) கொண்ட THAAD தொகுதி ஒன்று சுமார் $15 பில்லியன் விலை கொண்டது. ஆனால் இந்தியா தலா ஒரு ஏவுகருவியையும், 8 ஏவுகணைகளையும் கொண்ட 6 தொகுதி S-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து $5.4 பில்லினுக்கு மட்டுமே கொள்வனவு செய்ய இணங்கி இருந்தது.
.
NATO அங்க நாடான துருக்கியும் S-400 ஏவுகணைகளை NATOவின் எதிரி நாடான ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்ய இணங்கி உள்ளது.

.