இந்தியாவும் Hypersonic ஏவுகணையை ஏவியது

இந்தியாவும் Hypersonic ஏவுகணையை ஏவியது

திங்கள்கிழமை இந்தியா hypersonic ஏவுகணை ஒன்றை ஏவி பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்து உள்ளது. ஒடிசா மாநிலத்துக்கு அருகில் உள்ள தீவு ஒன்றில் இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் hypersonic ஏவுகணை நாடுகளாக உள்ளன .

இந்தியாவின் ஏவுகணை 30 km உயரத்துக்கு ஒலியின் வேகத்திலும் 6 மடங்கு வேகத்தில் சென்றதாக இந்தியா கூறி உள்ளது. இந்த ஏவுகணைக்கு பயன்படும் scramjet engine இந்தியாவின் DRDO (Defense Research and Development Organization) ஆல் தயாரிக்கப்பட்டது.

அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் தனது hypersonic பரிசோதனையை செய்திருந்தது. அமெரிக்காவும், இந்தியாவும் இதை சேவையில் ஈடுபடுத்த (deployment) மேலும் சிலகாலம் எடுக்கும். இந்தியாவுக்கு மேலும் 5 வருடங்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. சீனா ஏற்கனவே இவ்வாயுதத்தை சேவையில் கொண்டுள்ளது.

இந்தியாவின் Brahmos II என்ற ஏவுகணை ரஷ்யாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. அது ரஷ்யாவின் 3M22 Zircon ஏவுகணையை ஒத்தது. இந்தியாவின் புதிய hypersoni ஏவுகணை Brahmos நுட்பத்தை அடிப்படியாக கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலே கூறப்பட்டவை ஏவுகணைகள் மட்டுமே. இவ்வகை hypersonic ஏவுகணைகன் முன்புறத்தில் குண்டுகளை வைப்பது மேற்கொண்டு செய்யப்படும்.