இந்திய ஆர்பாட்டக்காரர் இலங்கை பொய் பிரசாரத்தில்

Photoshop

Internet இல் உண்மை செய்திகளுடன் ஒப்பிடுகையில் பொய் செய்திகளே அதிகம். பல சந்தர்ப்பங்களில் களவாடப்பட்ட படங்கள், வீடியோக்கள் இவ்வகை பொய் செய்திகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான தொழிநுட்பமும் இலகுவாக கிடைக்கிறது.
.
இந்தியாவில் பா.ஜ. கட்சி அண்மையில் அறிமுகப்படுத்திய Citizenship Amendment Act என்ற சட்டத்தை எதிர்த்து போராடும் இந்திய இஸ்லாமிய பெண் ஒருவரின் படம் ஒன்று இலங்கையில் சில சிங்களவாதிகளினால் முன்வைக்கப்பட்ட burqa தடைக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டு பயப்படுத்தப்பட்டுள்ளது.
.
கீழே உள்ள படங்களில் முதலாவது உண்மையான படமாகும். ஆனால் இரண்டாவதாக உள்ளது மாற்றி அமைக்கப்பட்ட படமாகும்.
.
Capture1
.
Capture2
.
முதல் படத்தில் அந்த பெண் பிடிக்கும் பெரிய பதாகை தரமாக மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும் பின்னணியில் உள்ள பாதாகைகளின் இந்தி வசனங்கள் இரண்டாவது படத்தில் அரைகுறையாக அழிக்கப்பட்டு உள்ளன.
.
இந்த பெண்ணுக்கு அவரின் படம் மாற்றி அமைக்கப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுவது தெரிந்திருக்க சந்தர்ப்பம் குறைவு.
.