இந்திய கடனை அடைக்க சீனாவிடம் கடன்?

SriLanka_India

இந்தியாவிடம் இருந்து பெற்ற கடன்களில் $960 மில்லியன் பெறுமதியான கடனை இலங்கை தற்போது அடைக்கவேண்டி உள்ளது. ஆனால் இலங்கையிடம் அக்கடனை அடக்க தேவையான பணம் தற்போது இல்லை.
.
அதனால் இந்த கடன் அடைப்பு காலத்தை நீடிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை பிரதமர் ராஜபக்ச 4 மாதங்களுக்கு முன்ன கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் The Hind பத்திரிகை கூறுகிறது. இருதரப்பும் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபடுகின்றன.
.
இந்த கடன் அடைப்பு காலத்தை நீடிக்காவிடின், இலங்கை சீனாவிடம் இருந்து கடன் பெற்று இந்திய கடனை அடைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். அதேவேளை மே மாதம் 13 ஆம் திகதி சீனா இலங்கைக்கான $500 மில்லியன் கடன் ஒன்றை உறுதி செய்துள்ளது.
.
கடந்த கிழமை சனாதிபதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமும் மேலதிக முதலீடுகளை இலங்கையில் செய்யுமாறு கேட்டுள்ளார்.
.
இந்த ஆண்டு இலங்கை $2.9 பில்லியன் பெறுமதியான கடனை அடைக்க வேண்டியுள்ளது. இலங்கை சுமார் $55 பில்லியன் சுமார் பில்லியன் கடனில் உள்ளது என்று கூறப்படுகிறது. அதில் 14% சீனாவிடமும், 12% ஜப்பானிடமும், 2% இந்தியாவிடமும் உள்ளன.
.
உல்லாச பயணிகள் மூலமான வருமானம், தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி மூலமான வருமானம், மத்திய கிழக்கு தொழிலாளர் மூலமான வருமானம் எல்லாமே தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளன.
.
Japan International Cooperation Agency (JICA) ஏற்கனவே கொழும்பில் அமைக்கப்படவிருந்த light rail சேவைக்கான முதலீடை இடைநிறுத்தி உள்ளது.
.