இந்தோனேசியாவின் நீர்மூழ்கி 53 பேருடன் தொலைவு

இந்தோனேசியாவின் நீர்மூழ்கி 53 பேருடன் தொலைவு

இந்தோனேசியாவின் KRI Nanggala 402 என்ற நீர்மூழ்கி கப்பல் 53 கடற்படையினருடன் தொலைந்து உள்ளது. அது பாலி கடல் பகுதியில் ஏவுகணை ஏவும் பயிற்சி ஒன்றுக்கு தயாராகும் வேளை புதன் அதிகாலை 4:30 மணியளவில் தொலைந்து உள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது. மேற்படி ஏவுகணை ஏவல் வியாழன் இடம்பெற இருந்தது.

தொலைந்த நீர்மூழ்கியை கண்டுபிடிக்க அஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது இந்தோனேசியா. இந்த நீர்மூழ்கி பாலி கரையில் இருந்து 100 km தொலைவில் உள்ள சுமார் 2,300 அடி ஆழமான கடலிலேயே அமிழ்ந்து இருக்கலாம் என்று உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. இந்த நீர்மூழ்கி பாதுகாப்பாக மூழ்கக்கூடிய ஆழம் 843 அடி மட்டுமே.

ஜேர்மன் தயாரிப்பான இந்த நீர்மூழ்கி 1978ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு, 1981ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்தது. இது 1,395 தொன் எடை கொண்டது. இதன் நீளம் 59.5 மீட்டர்.

இந்தோனேசியாவிடம் தற்போது 5 நீர்மூழ்கிகள் உள்ளன. அதில் 2 ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டவை, 3 தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டவை.