இன்று முதல் உலகின் பெரிய வர்த்தக வலயம்

இன்று முதல் உலகின் பெரிய வர்த்தக வலயம்

இன்று ஞாயிரு (2020/11/15) முதல் 15 நாடுகள் அங்கம் கொண்ட  Regional Comprehensive Economic Partnership (RCEP) என்ற வர்த்தக வலயம் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும், ASEAN அமைப்பில் அங்கத்துவம் கொண்ட புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாஒஸ், மலேசியா, பர்மா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகளுமே இந்த புதிய வர்த்தக வலயத்துள் நுழைந்து உள்ளன.

இந்த உடன்படிக்கையில் வர்த்தகம், சேவைகள், முதலீடுகள், இணைய வர்த்தகம், தொலைத்தொடர்பு, உரிமைகள் என்பன அடங்கும். ஆனால் தொழிலாளர் உரிமைகளும், சூழல் பாதுகாப்பும் அடங்கா.

இந்த வர்த்தக வலயத்துள் உலகின் 30% சனத்தொகை (2.2 பில்லியன்) அடங்குகிறது. இதற்கான ஆரம்ப வேலைகள் 2011 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டு இருந்தன.

இதற்கு பதிலாக ஒபாமா அரசு Trans-Pacific Partnership (TPP) என்ற வர்த்தக வலயத்தை அமைக்க முயன்று இருந்தாலும் பின்வந்த ரம்ப்  அதை நிறுத்தி இருந்தார்.

இந்தியாவும் ஆரம்பத்தில் RCEP பில் இணைய இருந்தாலும் 2019 ஆம் ஆண்டு இந்தியா வெளியேறி இருந்தது. விரும்பினால் இந்தியா பின்னர் இணையலாம் என்று சீனா கூறியுள்ளது.