இரண்டாம் தடவையாக சனாதிபதி ரம்ப் impeached

இரண்டாம் தடவையாக சனாதிபதி ரம்ப் impeached

அமெரிக்க காங்கிரசின் ஒரு பாகமான House அவை இன்று புதன்கிழமை சனாதிபதி மீது impeach என்ற பதவி விலக்கல் தீர்மானத்தை எடுத்துள்ளது. Democratic கட்சியின் பெரும்பான்மையை கொண்ட House அவை ரம்பை impeach செய்வது இது இரண்டாம் தடவை. அதனால் ரம்ப் மட்டுமே இரண்டு முறைகள் impeach செய்யப்பட்ட சனாதிபதி ஆகிறார்.

Impeachment தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும் (அனைத்து Democratic வாக்குகள் + 10 Republican வாக்குகள்), எதிராக 197 வாக்குகளும் (அனைத்தும் Republican வாக்குகள்) கிடைத்துள்ளன.

House அவை சனாதிபதி ஒருவரை impeach செய்தபின், காங்கிரசின் இரண்டாம் பாகமான Senate அவையும் 2/3 பெரும்பான்மையயுடன் impeach தீர்மானத்தை ஆதரித்தல் அவசியம். அவ்வாறு Senate அவையும் 2/3 பெரும்பான்மையுடன் impeach செய்தால் மட்டுமே சனாதிபதி பதவியில் இருந்து விலக்கப்படுவர்.

மொத்தம் 100 உறுப்பினர்களை கொண்ட Senate அவையில் தற்போது 50 பேர் Republican கட்சியினர். அவர்களில் குறைந்தது 17 உறுப்பினர் அனைத்து Democratic உறுப்பினர்களுடனும் இணைந்து ரம்புக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே ரம்ப் பதவியில் இருந்து விலக்கப்படுவார். வரும் 20ம் திகதிக்கு முன் தேவையான Senate உறுப்பினர் வாக்களித்தால் ரம்ப் பதவியை இறுதி தினங்களில் பதவியை இழப்பார். தீர்மானம் 20ம் திகதிக்கு பின் ஏற்பட்டால் ரம்பின் சில உரிமைகள் பறிக்கப்படலாம்.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி House செய்து கொண்ட ரம்ப் மீதான impeach தீர்மானத்துக்கு Republican கட்சி House உறுப்பினர் எவரும் ஆதரவு அளித்திருக்கவில்லை. ஆனால் இன்று 10 House அவை Republican உறுப்பினர்களும் ரம்பை impeach செய்ய ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.