இரண்டு UAE நபர்களை துருக்கி கைது

Turkey

இரண்டு United Arab Emirates (UAE) நபர்களை துருக்கி கைது செய்துள்ளதாக துருக்கியின் அரச செய்தி நிறுவனமான Anadolu இன்று வெள்ளிக்கிழமை கூறி உள்ளது. துருக்கியில் நிலைகொண்டுள்ள இவர்கள் இருவரும் UAE சார்பில் உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியே கைது செய்யப்பட்டு உள்ளனர்.
.
அத்துடன் இவர்களுக்கும், ஜமால் கசோகி என்பவர் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தொடர்பு உண்டதா என்பதையும் துருக்கி விசாரணை செய்கிறது.
.
துருக்கிக்கும், UAE க்கும் இடையே சிரியா, கட்டார், லிபியா, எகிப்து, ஈரான் ஆகிய நாடுகள் தொடர்பான விசயங்களில்  பலத்த முரண்பாடுகள் உண்டு. பல அரபு நாட்டு எதிரணிகள் துருக்கியிலேயே தங்கி உள்ளனர். குறிப்பாக Muslim Brotherhood துருக்கியில், துருக்கி அரசின் ஆதரவுடன் தங்கி உள்ளது. அரபு நாடுகளின் அரச குடும்பங்கள் Muslim Brotherhood அமைப்பு தங்களுக்கு ஆபத்தானது என்று கருதுகின்றன.
.
Muslim Brotherhood அமைப்புக்கு கட்டார் ஆராதவு வழங்குவது சவுதி, UAE போன்ற நாடுகள் 2017 ஆம் ஆண்டில் கட்டார் மீது தடைகளை விதிக்க முக்கிய காரணம்.

.