இறக்குமதி தடையால் நசியும் சிறு வர்த்தகங்கள்

இறக்குமதி தடையால் நசியும் சிறு வர்த்தகங்கள்

அந்நிய செலாவணி பளுவை குறைக்கும் நோக்கில் இலங்கை அரசு இறக்குமதிகளுக்கு பெரும் கட்டுப்பாடுகளை இட்டுள்ளது. இச்செயல் அந்நிய செலவாணி பளுவை குறைக்க சிறிது நிவாரணம் வழங்கினாலும், இறக்குமதியில் பிணைந்துள்ள சிறு வர்த்தகங்கள் பாதிப்பை அடைகின்றன.

இறக்குமதி தடைகள் காரணமாக கார், மோட்டார் சைக்கிள் போன்ற பாவித்த பொருட்களின் விலைகளும் உள்ளூரில் மிகையாக அதிகரித்து உள்ளன. இலங்கை சராசரியா ஆண்டு ஒன்றில் 50,000 முதல் 60,000 வாகனங்களை இறக்குமதி செய்யும். ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக அத்தொகை தற்போது குறைந்து உள்ளது.

2019ம் ஆண்டு $1.24 பில்லியன் பெறுமதியான இறக்குமதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வந்துள்ளது. ஆனால் அது 2020ம் ஆண்டில் $0.904 பில்லியன் ஆக குறைந்து உள்ளது. அது 27% வீழ்ச்சி. இலங்கை இறக்குமதி செய்யும் உரங்களுக்கு ஆண்டு ஒன்றில் சராசரியாக $400 மில்லியன் செலவிடுகிறது. அதையும் இலங்கை தற்போது கட்டுப்படுத்தி உள்ளது.

தற்போது இலங்கை கொண்டுள்ள அந்நிய செலவாணி $3 பில்லியன் மட்டுமே. ஜூன் மாத முடிவில் அது $4 பில்லியன் ஆக இருந்தது. 2020ம் ஆண்டு முடிவில் இலங்கை $5.6 பில்லியன் அந்நிய செலவாணியை கொண்டிருந்தது.

ஜூலை 27ம் திகதி உரிய நேரத்தில் இலங்கை $1 பில்லியன் bond கடனை மீள செலுத்தி இருந்தது. அதனாலேயே அந்நிய செலவாணி இருப்பு (foreign reserve) $3 பில்லியன் ஆக குறைந்துள்ளது.

அடுத்துவரும் 5 ஆண்டுகளில் இலங்கை சுமார் $29 பில்லியன் bond கடன்களை அடைக்கவேண்டும். இலங்கை அதற்கு தயாரான நிலையில் இல்லை என்று கருதும் Fitch Rating இலங்கையின் கணிப்பை CCC category ஆக குறைத்து உள்ளது.

2019ம் ஆண்டு உல்லாச பயணிகள் மூலம் $3.6 பில்லியன் பெற்ற இலங்கை கரோனா காரணமாக 2020ம் ஆண்டில் $0.957 பில்லியனையே பெற்றுள்ளது.