இலங்கைக்கு $1.84 மில்லியன், கப்பல் காப்புறுதி இணக்கம்

இலங்கைக்கு $1.84 மில்லியன், கப்பல் காப்புறுதி இணக்கம்

இலங்கையின் தென்கிழக்கு கடலில் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி தீ பற்றிய New Diamond என்ற எண்ணெய் கப்பலையும், அதன் பணியாளர்களையும் பாதுகாக்க செலவான தொகையை இலங்கைக்கு செலுத்த கப்பலின் காப்புறுதி நிறுவனமான West of London இணங்கி உள்ளது. காப்புறுதி நிறுவனம் 340 மில்லியன் ரூபாய்களை ($1.84 மில்லியன்) செலுத்தும்.

மேற்படி கப்பல் குவைத் நாட்டின் எணெய்யை இந்தியாவுக்கு எடுத்து செல்கையில் இலங்கையின் தென் கிழக்கே இந்து சமுத்திரத்தில் தீ பற்றி கொண்டது.

அந்த கப்பலின் தலைவர் (captain) தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவர் இலங்கையை விட்டு தற்போதைக்கு வெளியேற முடியாது. ஏனைய பணியாளர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். காயப்பட்ட ஒருவர் தற்போதும் வைத்தியம் பெறுகிறார். ஒரு பணியாளர் தீக்கு பலியாகி இருந்தார்.

விபத்துக்கு உள்ளான கப்பலின் மீட்பு பணிகள் சிங்கப்பூரின் SMIT Singapore Pte Ltd என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டு உள்ளன.