இலங்கையின் புதிய விமான சேவை Spark Air

இலங்கையின் புதிய விமான சேவை Spark Air

வரும் பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் Spark Air என்ற புதிய விமான சேவை ஒன்று இயங்கவுள்ளது. இந்த விமான சேவை ஆரம்பத்தில் மாத்தறை விமான நிலையத்தில் இருந்து பொதிகளை காவும் பணியில் ஈடுபடும்.

கரோனா காரணமாக முதலில் இரண்டு Airbus 330 வகை விமானங்களுடன் பொதிகளை காவும் சேவையுடன் ஆரம்பித்தாலும் பின்னர் பயணிகள் சேவையும் செய்யும் என Spear Air கூறுகிறது.

விமானிகள் Robert Spittel, Ramzi Raheem, Samin Attanayake, Ashan De Alwis, Suranjan De Silva ஆகியோர் இந்த புதிய விமான சேவையின் பணிப்பாளர்களாக உள்ளனர். பாதுகாப்பு அதிகாரியாக விமானி Uditha Danwatte பணியாற்றுகிறார்.

இலங்கை விமான சேவையில் பணியாற்றிய Uditha Danwatte பின்னர் Air Asia விமான சேவையில் பணியாற்றி இருந்தார். இவரின் மகனும் ஒரு விமானி. தந்தையும், மகனும் ஒருமுறை Air Asia விமானத்தை இலங்கைக்கு செலுத்தி இருந்தனர்.

மொத்தம் 26 விமானங்களை மட்டும் கொண்ட SriLankan விமான சேவை 7,000 பணியாளர்களை கொண்டிருக்கையில், 110 விமானங்களை கொண்ட Air Asia 2,500 பணியாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. அந்நிலையில் எவ்வாறு SriLankan விமான சேவை இலாபம் ஈட்ட முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் Uditha.