இலங்கை அரச bond மீண்டும் 20% ஆல் வீழ்ச்சி

இலங்கை அரச bond மீண்டும் 20% ஆல் வீழ்ச்சி

இலங்கை அரசின் அமெரிக்க டாலர் மூலமான bond அக்டோபர் மாதம் மேலும் 20% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் மாதம் இது 15.5% ஆல் வீழ்ந்து இருந்தது.

ஒரு காலத்தில் ஆசியாவின் தரமான bond ஆக இருந்த இலங்கை அரச bond தற்போது மிகவும் பலமற்ற ஒன்றாக மாறி உள்ளது என்கிறது Bloomberg Barclays சுட்டி.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) கணிப்புப்படி இலங்கையின் இந்த வருட GDP வீழ்ச்சி 5.5% ஆக இருக்கும். அவ்வாறு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் அது 1951 ஆம் ஆண்டுக்கு பின்னரான பாரிய வீழ்ச்சியாக இருக்கும்.

உல்லாசப்பயம் மூலமான வருமானம் இலங்கைக்கு முக்கியமான ஒன்று. கரோனா காரணமாக உல்லாச பயண வருமானம் முற்றாக அழிந்து உள்ளது. அடுத்துவரும் மாதங்களிலும் உல்லாச பயண துறை வளரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

ஆனால் இலங்கை அமைச்சர் Nivard Cabraal நிலைமை அவ்வாறு மோசமானது இல்லை என்று கூறியுள்ளார். அத்துடன் இலங்கை $700 மில்லியன் கடனை China Development Bank என்ற வங்கியிடம் இருந்து பெற முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.