இலங்கை இராணுவத்தினர் மீது தடைக்கு ஐ.நா. அத்திவாரம்?

முன்னாள் மற்றும் தற்கால இலங்கை இராணுவத்தினர் சிலர் மீது பயண தடைகள், வங்கி கணக்கு முடக்கம், சொத்து முடக்கம் போன்ற தடைகளை விதிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் Michelle Bachelet இன்று புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளார். இந்த அறிக்கை அடுத்த மாதம் அமர்வில் ஆராயப்படும்.

ஐ.நா. அதிகாரி தனது பரிந்துரையில் தற்போதை சனாதிபதி கோத்தபாயா குறைந்தது 28 முன்னாள் அல்லது தற்கால இராணுவ அதிகாரிகளுக்கு பிரதான பதவிகளை வழங்கி உள்ளதாகவும் குற்றம் கூறியுள்ளார்.

குறிப்பாக தற்போதை இராணுவ தளபதி ஜெனரல் Shavendra Silva (முன்னாள் 58ம் படை தளபதி), பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் Kamal Gunaratne (முன்னாள் 53ம் படை தளபதி) ஆகியோரின் பெயர்கள் ஐ.நா. அதிகாரியால் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஜெனரல் Silva ஏற்கனவே அமெரிக்காவின் பயண தடையில் உள்ளார்.

இராணுவம் மீது மட்டுமன்றி, யுத்த குற்றங்கள் செய்த புலி உறுப்பினர்கள் மீதும் அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஐ.நா. அதிகாரி தனது 17 பக்க அறிக்கையில் கேட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் 2006ம் ஆண்டு august மாதம் கொலை செய்யப்பட்ட 17 பிரெஞ்சு தொண்டர் நிறுவன ஊழியர் விபரம், படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் Lasantha Wickrematunge விபரம் ஆகியனவும் குறிப்பிடப்பட்டு உள்ளன. 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 தமிழரை படுகொலை செய்த இராணுவத்தினனை விடுதலை செய்ததையும் அறிக்கை கண்டித்து உள்ளது.