இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு குறைந்தது 207 பேர் பலி

EasterAttack

ஈஸ்டர் ஞாயிரான இன்று கிறீஸ்தவ தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் இடம்பெற்ற 6 குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 207 பேர் பலியாகியும், 450 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோருள் குறைந்தது 36 பேர் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா (குறைந்தது 5 பேர்), இந்தியா, துருக்கி, டென்மார்க், நெதர்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் உட்பட்ட அந்நிய நாடுகளின் பிரசைகள்.
.
இன்று காலை சுமார் 8:45 மணியளவில் இடம்பெற்ற ஒரேநேர தாக்குதல்கள் கொழும்பு St. Anthony’s Shrine, நீர்கொழும்பு Sebastian’s Church, மட்டக்களப்பு Zion Church, Shangri-La Hotel, Cinnamon Grand Hotel, The Kingsbury Hotel ஆகிய இடங்களில் இடம்பெற்று உள்ளன. தெமட்டகொட, தெஹிவளை ஆகிய இடங்களில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன.
.
தாக்குதல்களின் பின்னர் இரத்த தானம் செய்யும் இடம் நிரம்பி வழிந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் பலரும் பின்னர் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.
.
இதுவரை சுமார் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தெமட்டகொட வீடு ஒன்றை முற்றுகை இட்டபோது 3 போலீசார் கொலை செய்யப்பட்டு உள்ளனர். பாணந்துறையில் உள்ள Sarikkamulla பகுதி வீடு ஒன்றும் தேடப்பட்டு உள்ளது.
.
இந்தியாவின் மோதி, பிரித்தானியவின் மே, பாக்கித்தானின் இம்ரான் கான், ருஷ்யாவின் பூட்டின் ஆகியோர் அனுதாபம் தெரிவித்தோருள் அடங்குவர். Organization of Islamic Cooperation னின் தலைவர் Yousef al-Othanimeen இந்த தாக்குதலை கோழைத்தனான தாக்குதல் (cowardly attacks) என்று கூறியுள்ளார்.
.
2012 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி 21.2 மில்லியன் மக்களை கொண்ட இலங்கையில் 70.2% மக்கள் புத்த சமயத்தையும், 12.6% மக்கள் இந்து சமயத்தையும், 9.7$ மக்கள் இஸ்லாமிய மதத்தையும் சார்ந்தவர்கள்.

.