இலங்கை கடவுச்சீட்டு 100ம் இடத்தில்

இலங்கை கடவுச்சீட்டு 100ம் இடத்தில்

2021ம் ஆண்டுக்கான Henley Passport சுட்டிப்படி 42 நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி செல்லக்கூடிய வல்லமை கொண்ட இலங்கை கடவுச்சீட்டு 100ம் இடத்தில் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளைப்போலவே இம்முறையும் ஜப்பானின் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 191 நாடுகளுக்கு ஜப்பான் கடவுச்சீட்டு கொண்டோர் விசா இன்றி பயணிக்க முடியும்.

இரண்டாம் இடத்தில் சிங்கப்பூரின் கடவுச்சீட்டும் (விசா இன்றி செல்லக்கூடிய நாடுகள் 190), மூன்றாம் இடத்தில் தென்கொரிய மற்றும் ஜெர்மனி கடவுச்சீட்டுக்களும் (விசா இன்றி செல்லக்கூடிய நாடுகள் 189) உள்ளன.

4ம் இடத்தில்: 188 நாடுகளுக்கு விசா இன்றி செல்லக்கூடிய இத்தாலி, பின்லாந்து, ஸ்பெயின், லக்சம்பேர்க் ஆகின நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் உள்ளன.

7ம் இடத்தில்: 185 நாடுகளுக்கு விசா இன்றி செல்லக்கூடிய அமெரிக்காவின் கடவுச்சீட்டு உள்ளது.

9ம் இடத்தில்: 183 நாடுகளுக்கு விசா இன்றி செல்லக்கூடிய கனடாவின் கடவுச்சீட்டு உள்ளது.

70ம் இடத்தில்: 75 நாடுகளுக்கு விசா இன்றி செல்லக்கூடிய சீனாவின் கடவுச்சீட்டு உள்ளது.

85ம் இடத்தில்: 58 நாடுகளுக்கு விசா இன்றி செல்லக்கூடிய இந்திய கடவுச்சீட்டு உள்ளது.

101ம் இடத்தில்: 41 நாடுகளுக்கு விசா இன்றி செல்லக்கூடிய பங்களாதேசத்தின் கடவுச்சீட்டு உள்ளது.

107ம் இடத்தில்: 32 நாடுகளுக்கு விசா இன்றி செல்லக்கூடிய பாகிஸ்தான் கடவுச்சீட்டு உள்ளது.

110ம் இடத்தில்: 26 நாடுகளுக்கு விசா இன்றி செல்லக்கூடிய ஆப்கானித்தான் கடவுச்சீட்டு உள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு கொண்டோர் விசா இன்றி செல்லக்கூடிய நாடுகள் (* Visa on arrival, ** eTA):