இலங்கை தொழிலாளிகள் மீது ரூமேனியாவில் கிளர்ச்சி

Romania

இலங்கையில் இருந்து வேலைவாய்ப்பு முகவர் ஒன்றின் மூலம் ரூமேனியா (Romania) சென்ற இரண்டு வெதுப்பக (bread factory) ஊழியர்கள் மீது அந்த நகரின் மக்கள் கிளர்ந்துள்ளனர். இவர்களின் வருகை தமது நகருக்கு மேலதிக அந்நியர்களை வரவழைக்கும் என்று கிளர்ச்சியாளர் கூறுகின்றனர்.
.
அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள Ditrau என்ற நகரிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்களை வரவழைத்த தொழிசாலை உரிமையாளர் உள்ளூரில் தேவையான ஊழியர் இல்லாததாலேயே வெளிநாட்டு ஊழியரை அமர்த்தி உள்ளதாக கூறியுள்ளார். நம் நாட்டவர் ஐரோப்பா சென்று உள்ளதால், ஏன் இலங்கையர்கள் இங்கு வந்து சட்டப்படி உழைக்க முடியாது என்று கேட்க்கிறார் வெதுப்பக உரிமையாளர்.
.
இன்று புதன் சுமார் 200 உள்ளூர் மக்கள் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கூடி எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். வரும் சனிக்கிழமையும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகி உள்ளனர். அந்த தேவாலய பிதாவும் எதிர்பாளருக்கு உதவியாக உள்ளார்.
.
நகருக்கு அப்பால் குடியிருந்த Piumal (வயது 22) என்பவரும், Amahinda (வயது 49) என்பவரும் தொடுக்கப்பட்ட மிரட்டல்கள் காரணமாக ஏற்கனவே இரண்டு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு, தற்போது மூன்றாம் இடத்தில் குடியேறி உள்ளனர்.
.
மேலும் ஒரு இலங்கையரையும், 4 நேபாளத்தினரையும் வெதுப்பக வேலைகளுக்கு வரவழைக்க உள்ளதாக வெதுப்பக உரிமையாளர் கூறி உள்ளார்.
.