இஸ்ரேலில் யூதமத கூடல் நெரிசலுக்கு 50 பேர் பலி

இஸ்ரேலில் யூதமத கூடல் நெரிசலுக்கு 50 பேர் பலி

இஸ்ரேலில் இன்று வியாழன் இரவு இடம்பெற்ற மத கூடல் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு குறைந்தது 50 பேர் வரை பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். ஏன் இந்த திடீர் நெரிசல் ஏற்பட்டது என்பது இதுவரை அறியப்படவில்லை.

கரோனா காரணமாக இந்த கூடலை அதிகாரிகள் தடுத்து இருந்தும் சுமார் 100,000 கூட்டத்தில் கலந்திருந்தனர். இவர்கள் கடும்போக்கு (ultra-Orthodox) யூதர்கள்.

Mount Meron என்ற இடத்தில் ஒவொரு ஆண்டும் இடம்பெறும் இந்த கூட்டம் கடந்த ஆண்டும் கரோனா காரணமாக தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த தடையையும் மீறி அங்கு சென்றோர் 300 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த இடத்தில் 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த Rabbi Shimon Bar Yochai என்ற யூத மத தலைவரின் சமாதி உள்ளது.