இஸ்ரேல், UAE உறவு ஆரம்பம்

இஸ்ரேல், UAE உறவு ஆரம்பம்

அபுதாபி, டுபாய் ஆகிய நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ள UAE (United Arab Emirates) இஸ்ரேலுடன் உறவை ஆரம்பிக்கறது. இந்த செய்தியை அமெரிக்க சனாதிபதி ரம்ப், இஸ்ரேல் பிரதமர் Netanyahu, UAE Crown Prince Mohammed Al Nahyan ஆகியோர் இன்று இணைந்த அறிக்கை மூலம் வெளியிட்டு உள்ளனர்.

இஸ்ரேலுடன் உறவை ஆரம்பிக்கும் 3 ஆவது அரபு நாடாக UAE அமைகிறது. 1979 ஆம் ஆண்டில் எகிப்த் இஸ்ரேலுடன் உறவை ஆரம்பித்து இருந்தது. அதன் பின் ஜோர்டான் 1994 ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் உறவை ஆரம்பித்து இருந்தது.

அதேவேளை பலஸ்தீனர் இந்த உறவு தொடர்பாக கவலை தெரிவித்து உள்ளனர். பலஸ்தீனர் இடங்களை இஸ்ரேல் தொடர்ந்து அபகரிக்கையில் அவர்களுடன் UAE உறவு கொள்வது அவர்களுக்கு கவலையை அளித்துள்ளது. தற்காலங்களில் அரபுகள், இஸ்லாமியர் அல்லாதோர் பலஸ்தீனர் மீது கொண்டுள்ள பரிதாப பார்வையையாவது பலஸ்தீனரின் சகோதரர்கள் கொண்டிருக்கவில்லை.

அண்மையில் பலஸ்தீனருக்கான தனது உதவி பொருட்களை UAE இஸ்ரேல் விமான நிலையம் மூலம் அனுப்பியது. உதவிகளை வழமைபோல் ஜோர்டான் மூலம் அனுப்பாது இஸ்ரேல் மூலம் அனுப்பியதால் பலஸ்தீனர் அந்த உதவி பொருட்களை பெற மறுத்துவிட்டனர்.

அடுத்துவரும் கிழமைகளில் இஸ்ரேலும், UAE யும் முதலீடு, உல்லாசப்பயணம், நேரடி விமான சேவை, பாதுகாப்பு, தொழிநுட்பம், எரிபொருள், வைத்திய துறை, ஆகியவற்றில் ஒப்பந்தங்கள் செய்யும்.