ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம்?

Iran-Iraq

நேற்று ஞாயிறு ஈராக்கின் பாராளுமன்றம் அங்கிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற தீர்மானம் கொண்டதின் காரணமாக அமெரிக்க படைகள் இன்று திங்கள் வெளியேற ஆரம்பித்துள்ளதாக Reuters செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
.
ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் William H. Seely III கையொப்பம் இட்டு ஈராக் அரசுக்கு அனுப்பிய இந்த கடிதத்தில் “Sir, in deference to the sovereignty of the Republic of Iraq, and as requested by the Iraqi Parliament and the Prime Minister, CJTF-OIR will be repositioning forces over the course of the coming days and weeks to prepare for onward movement,”என்று கூறப்பட்டுள்ளது.
.
அத்துடன் அமெரிக்க படையினர் ஹெலிகள் மூலம் நகர்த்தப்படுவர் என்றும், அதனால் ஹெலிகளின் பயன்பாடு அதிகரித்து காணப்படும் என்றும் கடிதம் கூறியுள்ளது.
.
ஆனால் சனாதிபதி ரம்ப்  இது தொடர்பாக கருத்து எதையும் இதுவரை கூறி இருக்கவில்லை. அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்டகனும் கருத்து கூற மறுத்துள்ளது.
.
ரம்பின் கட்டளைக்கு அமைய ஈரானின் ஜெனரல் Suleimani ஈராக் விமானநிலையத்தில் படுகொலை செய்யப்படத்தின் விளைவே மேற்படி ஈராக்-அமெரிக்கா முரண்பாடுக்கு காரணம்.
.