ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது

ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது

Bella, Bering, Pandi, Luna ஆகிய நான்கு எண்ணெய் கப்பல்கள் ஈரானின் எண்ணெய்யை வேனேசுஏலாவுக்கு (Venezuela) எடுத்து செல்கையில் அமெரிக்கா அவற்றை கைப்பற்றி உள்ளது. இந்த கப்பல்கள் சுமார் 1.1 மில்லியன் பரல்கள் எண்ணெய்யை காவி சென்றுள்ளன. இந்த செய்தியை அமெரிக்கா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்து உள்ளது.

இந்த கப்பல்கள் ஈரானின் இராணுவ பாதுகாப்பு இன்றியே பயணித்தன. இந்த 4 கப்பல்களும் தற்போது Texas மாநிலத்து Houston நகரின் கரை நோக்கி நகர்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இந்த கைப்பற்றலுக்கு அமெரிக்காவின் இராணுவம் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பதிலாக கப்பல் உரிமையாளர், காப்புறுதி நிறுவனம், மாலுமிகள் ஆகியோரை மிரட்டியே எண்ணெய்யை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

முன்னர் வேறு 5 கப்பல்கள் ஈரானின் 1.5 மில்லியன் பரல் எண்ணெய்யை வேனேசுஏலாவுக்கு எடுத்து சென்று இருந்தன.