ஈரான் ஜெனரலை அமெரிக்கா ஈராக்கில் கொலை

Iraq

ஈரானின் Revolutionary Guards என்ற பகிரங்கமான விசேட இராணுவ அணியின் கீழ், ஆனால் இரகசிய தாக்குதல்களில் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட Quds Force என்ற அணியின் தலைவரான General Qasem Soleimani என்ற இராணுவ அதிகாரியை இன்று வியாழன் அமெரிக்க விமானப்படை தாக்கி கொலை செய்துள்ளது.
.
ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியேறுகையிலேயே Soleimani ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளார்.
.
இவர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதுவரகத்தின் மீதான தாக்குதலுக்கு காரணமானவர் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
.
இவரின் Quds Force சிரியாவின் அசாத் மீது அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் யுத்தம் தொடுத்தபோது அசாத்தின் அரசை பாதுகாக்க உதவியது.
.