உதவிக்கு குதித்த ரஷ்ய அவசரகால அமைச்சரும் பலி

உதவிக்கு குதித்த ரஷ்ய அவசரகால அமைச்சரும் பலி

RT என்ற ரஷ்ய செய்தி சேவையின் படப்பிடிப்பாளர் ஒருவர் வீழ்ச்சி ஒன்றில் வீழ்ந்தபோது அவரை காப்பாற்ற குதித்த 55 வயதுடைய Yevgeny Zinichev என்ற ரஷ்ய அவசரகால அமைச்சரும் (Emergency Minister) பலியாகி உள்ளார்.

வயது 63 கொண்ட Alexander Melnik என்ற படப்பிடிப்பாளர் Norilsk என்ற பகுதியில் உள்ள Kitabo Oron என்ற நீர்வீழ்ச்சியின் எல்லையில் (cliff) இருந்தபோது தவறி பள்ளத்தாக்குள் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற முனைந்த அமைச்சரே பலியாகி உள்ளார். படப்பிடிப்பாளரும் கூடவே பலியாகி உள்ளார்.

2018ம் ஆண்டு முதல் அவசரகால அமைச்சராக பதவி வகிக்கும் Zinichev சனாதிபதி பூட்டினுக்கு நெருக்கமானவர். பூட்டினை போலவே இவரும் KGB உளவு அமைப்பில் 1987 முதல் 1991 வரை பணியாற்றியவர். இராணுவத்தில் இவர் ஓர் ஜெனரல்.

சுமார் 6,000 உறுப்பினர்களை கொண்ட இராணுவ பயிற்சி ஒன்றின்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயிற்சியை ஆவணம் செய்யும் பணிக்கு சென்றவரே மேற்படி படப்பிடிப்பாளர்.