உறுப்பினர் உரையாடல்களை திருடியது Facebook

Facebook

Facebook உறுப்பினர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் Facebook Messenger மூலம் செய்த உரையாடல்களை Facebook இரகசியமாக பதிவு செய்து வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்கி உள்ளது என்று Bloomberg செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
.
ஒலி வடிவில் (wave files) உள்ள உரையாடல்களை எழுத்து (text files) வடிவுக்கு மாற்றும் முயற்சியின் ஒரு அங்கமாகவே இந்த audio file கள் வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளன.
.
செய்வாய்க்கிழமை இந்த செய்தி பகிரங்கத்துக்கு வந்தபின், தம் இவ்வாறு செய்வதை ஒரு கிழமைக்கு முன்னரே நிறுத்தி விட்டதாக Facebook கூறியுள்ளது.
.
Amazon, Apple, Google போன்ற பெரிய நிறுனவங்கள் எல்லாமே இவ்வாறு உறுப்பினர் உரையாடல்களை சட்டத்துக்கு முரணாக பதிவு செய்கின்றன.
.
இவ்வகை திருட்டுகளை செய்வதால் Facebook மீது அமெரிக்காவின் Federal Trade Commission ஏற்கனவே $5 பில்லியன் தண்டம் விதித்து உள்ளது.

.