உலகம் எங்கும் சீனாவில் ஆரம்பித்த corona வைரஸ்

Coronavirus

சீனாவின் வூகான் (WuHan) நகரில் ஆரம்பித்த coronavirus தற்போது உலகம் எங்கும் பரவ ஆரம்பித்து உள்ளது. பரவலை தடுக்க விமான பயணிகள் மீது விமான நிலையங்களின் கவனம் திரும்பி உள்ளது.
.
2019-nCoV என்ற இந்த வைரஸ் மனிதரில் இருந்து மனிதருக்கு பரவக்கூடியது என்று சீனா கூறி உள்ளது. இந்த வைரஸ் மனிதரில் காணப்பட்டது இதுவே முதல் தடவை.
.
இந்த வைரஸுக்கு இதுவரை சீனாவில் 6 பேர் பலியாகியும், சுமார் 300 பேர் நோய்வாய்ப்பட்டும் உள்ளனர்.
.
தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் ஆகிய இடங்களுக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது.
.
வடகொரியா தற்காலிகமாக சீனாவில் இருந்தான விமான சேவைகளை நிறுத்தி உள்ளது.
.
கடந்த 15 ஆம் திகதி அமெரிக்காவின் Seattle நகரம் திரும்பிய விமான பயணிகள் மூலம் அமெரிக்காவிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது என்று அமெரிக்காவின் Centers for Disease Control கூறி உள்ளது.
.