உலகவங்கி தலைவர் திடீர் பதவி விலகல்

WorldBank

உலகவங்கியின் தலைவர் Jim Yong-kim இன்று திங்கள் தீடீரென தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இவர் தான் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக காரணம் கூறி இருந்தாலும், உண்மை வேறாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
.
இவரின் பதவி காலம் 2022 ஆம் ஆண்டிலேயே முடிய உள்ள நிலையில், இந்த திடீர் பதவி விலகலுக்கு அமெரிக்க அரசில் நிலவரங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொரியர் வழி வந்த அமெரிக்கரான Jim Yong-kim முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவாவினால் உலக வங்கி தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டவர்.
.
Jim முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் கொள்கைகளுக்கு ஒப்ப green energy அதிகரிப்பை ஆதரித்து, நிலக்கரி பயன்பாட்டை குறைக்க விரும்பியவர். அவரின் பதவிக்காலத்தில் அந்த கொள்கைக்கு உடன்படும் முறையிலேயே உலக வங்கியும் முதலீட்டு உதவிகளை செய்து வந்திருந்தது.ஆனால் ரம்ப் முரணான கொள்கையை கொண்டவர்.
.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் உருவாக்கப்பட்ட உலக வங்கி அமெரிக்காவின் கைகளில் இருக்க, அதே காலத்தில் உருவாக்கப்பட்ட IMF ஐரோப்பியர் கைகளில் உள்ளது.
.
தற்போது ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக உள்ளதால் அவரின் விருப்பத்துக்கு உரிய ஒருவரே புதிய உலக வங்கி தலைவர் ஆக தெரிவு செய்யப்படுவார்.
.
உலக வாங்கி அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை மறைமுகமாக வளர்முக நாடுகளுள் திணிக்கிறது என்று கூறியே, சீனா 2016 ஆம் ஆண்டில் AIIB (Asian Infrastructure Investment Bank) என்ற அபிவிருத்தி வங்கியை தனது தலைமையில் 2016 உருவாக்கி இருந்தது.

.