உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிகள் தொடர்கின்றன

Dow

உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிகள் இன்றும் தொடர்கின்றன.
.
வியாழக்கிழமை (மார்ச் 12) அமெரிக்காவின் DOW பங்கு சந்தை 10% ஆல் (அதாவது 2,352 புள்ளிகளால்) மீண்டும் வீழ்ந்துள்ளது. DOW சந்தையின் 125 வருட காலத்தில் இடம்பெற்ற அதிக ஒருநாள் வீழ்ச்சி இதுவே. அமெரிக்க அரசு $1.5 டிரில்லியன் முதலீடுகளை செய்யவுள்ளதாக கூறி இருந்தும் பங்கு சந்தைகள் தொடர்ந்தும் வீழ்கின்றன.
.
ஓய்வூதிய முதல்கள் போன்ற பெரும் முதலீடுகள் பங்கு சந்தைகளிலேயே முதலீடு செய்கின்றன.
.
அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing கின் பங்கு ஒன்று இன்று 18% ஆல் வீழ்ந்துள்ளது. சுமார் ஒரு மாதத்தின் முன் $350 ஆக இருந்த Boeing பங்கு ஒன்று இன்று $154 மட்டுமே.
.
வியாழக்கிழமை கடனாவின் Toronto Stock Exchange சுமார் 12% ஆல் வீழ்ந்துள்ளது. இந்த பங்கு சந்தையின் அதிகூடிய ஒருநாள் வீழ்ச்சி இதுவே. இந்த ஒருநாள் வீழ்ச்சி அங்கு 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீழ்ச்சியிலும் அதிகம்.
.
வெள்ளிக்கிழமை (மார்ச் 13) காலை 10:30 மணியளவில் ஹாங் காங் பங்கு சந்தையான Hang Seng காலையில் 6.7% ஆல் வீழ்ந்துள்ளது.
.
தென் கொரியாவின் Kosdaq பங்கு சந்தை 13.5% ஆல் வெள்ளிக்கிழமை வீழ்ந்துள்ளது. அதனால் தென்கொரிய பங்கு சந்தை 20 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
.
ஜப்பானின் Nikkei பங்கு சந்தை மேலும் 8% ஆல் வெள்ளிக்கிழமை வீழ்ந்துள்ளது.
.
அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பங்கு சந்தைகளும் 8% களுக்கு அதிகமான வீழ்ச்சியை வெள்ளிக்கிழமை கண்டுள்ளன.
.
தாய்லாந்தின் பங்கு சந்தை 10% க்கும் அதிகமாக வெள்ளிக்கிழமை வீழ்ந்துள்ளது.
.
உலக அளவில் கொரோனா தொற்றியோர் தொகை: 131,846
மரணித்தோர் தொகை: 4,948
குணமடைந்தோர் தொகை: 69,847
.