எகிப்தில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

Egypt

எகிப்தில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன. இம்முறை ஆர்ப்பாட்டங்கள் சர்வாதிகாரி ஜெனரல் சிசியின் (Abdel-Fattah el-Sissi) அரசுக்கு எதிரானவை.
.
சனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருந்த முன்னைய மோர்சி அரசை 2013 ஆம் ஆண்டு இராணுவ சதி மூலம் கலைத்து, மோர்சியை சிறையில் அடைத்து, ஆட்சிக்கு வந்திருந்த சிசிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் Mohamed Ali என்ற செல்வந்தர். இவர் முன்னாளில் எகிப்திய இராணுவத்துக்கு கட்டடங்கள் கட்டும் சேவை (contractor) செய்தவர். இவர் தற்போது ஸ்பெயின் நாட்டில் தங்கியுள்ளார்.
.
Mohamed Ali எவ்வாறு உயர்மட்ட எகிப்திய இராணுவ ஆட்சியாளர் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.
.
கடந்த வெள்ளிக்கிழமை (20 ஆம் திகதி) முதல் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் எகிப்தின் பல நகரங்களில் இடம்பெற்றுள்ளன.
.
2018 ஆம் ஆண்டில் 32% எகிப்தியர் நாள் ஒன்றுக்கு $1.45 பெறுமதியான வருமானத்தையே கொண்டுருந்தனர். 2015 ஆம் ஆண்டில் இந்நிலையில் இருந்தோர் அளவு 27.8% மட்டுமே.
.