எதியோப்பிய அணைக்கு குண்டு போட அழைத்த ரம்ப்

எதியோப்பிய அணைக்கு குண்டு போட அழைத்த ரம்ப்

ஆபிரிக்க நாடான எத்தியோப்பியா (Ethiopia) நீண்ட காலமாக அமெரிக்க நேச நாடாக இருந்து வந்துள்ளது. ஆனால் எதியோப்பியா Blue Nile ஆற்றின் குறுக்கே கட்டும் Grand Ethiopian Renaissance Dam (GERD) என்ற நீர்மின் அணை காரணமாக அமெரிக்காவுக்கும், எதியோப்பியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி உள்ளது.

Lake Victoria வில் இருந்து வரும் White Nile ஆறும், எதியோபியாவில் இருந்து வரும் Blue Nile ஆறும் சூடானின் Khartoum (Sudan) நகருக்கு அண்மையில் இணைந்து நைல் (Nile) நதியாக எகிப்த் கரையில் கடலுள் வீழ்கிறது.

எதியோப்பியா தற்போது 1.8 km நீளமும், 170 மீட்டர் உயரமும் கொண்ட GRED என்ற நீர்மின் அணையை சூடான் எல்லையோரம் கட்டி வருகிறது. இந்த அணையால் எகிப்துக்கு கிடைக்கும் நீரின் அளவு குறையும். அதனால் விசனம் கொண்ட எகிப்த் அமெரிக்காவின் உதவியை நாடி உள்ளது. அதன் விளைவாகவே எகிப்த் குண்டு வீசி அணையை உடைக்கலாம் (blow up) என்று ரம்ப் கடந்த கிழமை கூறி இருந்தார்.

எகிப்தில் இராணுவ கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்த Sisi யை ரம்ப் தனது விருப்பத்துக்கு உரிய சர்வாதிகாரி (favorite dictator) என்று கூறியிருந்தார். மேற்படி விசயம் காரணமாக அமெரிக்கா எதியோபியாவுக்கு வழங்கவிருந்த $100 மில்லியன் உதவியையும் நிறுத்தி உள்ளது.

2019 ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize) எதியோப்பிய பிரதமருக்கு (Abiy Ahmed Ali) கிடைத்து இருந்தது. அந்த பரிசு தனக்கு வரவேண்டுயது என்று ரம்ப் புலம்பி இருந்தார்.

ஆபிரிக்க நாடுகள் எல்லாம் சீனாவின் ஆளுமை பரவும் காலத்தில், ரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஆளுமையை அங்கு மேலும் அழிய செய்கின்றன.