ஐ. நா. படைகள் இலங்கை இராணுவத்துக்கு தடை

Lanka_UN

இலங்கை இராணுவத்தை ஐ.நா. வின் அமைதி படைகளில் இணைப்பதை ஐ.நா. தடை செய்துள்ளது. லெப். ஜெனரல் Shavendra Silvaவை இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமித்ததே ஐ. நா.வின் இந்த நடவடிக்கைக்கு காரணம்.
.
ஐ.நா. வின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் Farhan Haq இந்த செய்தியை புதன்கிழமை வெளியிட்டு உள்ளார்.
.
இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் Shavendra Silva யுத்த குற்ற செயல்களை செய்திருந்தார் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்த குற்றச்சாட்டுகள் இலங்கை அரசால் நியாயமான முறையில் விசாரிக்கப்படவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.
.
மேற்படி தீர்மானத்தின்படி புதிதாக இலங்கை படையினர் ஐ.நா. வின் அமைதிப்படையில் இணைக்கப்படமாட்டார்கள். அத்துடன் தற்போது ஐ.நா. அமைதி படையில் உள்ள இலங்கை படையினர் படிப்படியாக பின்வாங்கப்பட்டுவர் என்றும் கூறப்படுகிறது.
.