கடனடிய அரசு ஊழல் மறைப்பில்?

SNC-Lavalin

கனடிய பிரதமர் Justin Trudeau தலைமையிலான அரசு SNC-Lavalin என்ற கனடிய நிறுவனம் முற்காலங்களில் செய்த ஊழல்களை மறைக்க முயல்கின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டில் தொடர்பு கொண்டிருந்த முன்னாள் கனடிய நீதி அமைச்சர் Judy Wilson-Raybould பதவி விலகியும் உள்ளார்.
.
SNC-Lavalin என்ற கனடிய நிறுவனம் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளன ஒரு கட்டிட நிர்மாண நிறுவனம். இந்நிறுவனம் அணு உலைகள், நிலக்கீழ் போக்குவரத்துக்கு சுரங்கங்கள் போன்ற பாரிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் நிறுவனம்.
.
SNC-Lavalin கனடாவின் பிரெஞ்சு மாகாணமான கியூபெக்கில் தலைமையகத்தை கொண்டதால், அதை காப்பாற்றுவதன் மூலம் வரும் தேர்தலில் பிரெஞ்சு வாக்குகளை பெற Trudeau அரசு முனைகிறது என்று கூறப்படுகிறது. அரசு அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
.
SNC-Lavalin மீது தற்போது கனடிய போலீசார் ஊழல் வழக்கு ஒன்றை தொடர்கின்றனர். ஆனால் அதை தடுக்கு கடந்த ஜூன் மாதம் Trudeau அரசு ஒரு புதிய சட்டத்தை Bill C-74 மூலம் நடைமுறை செய்தது. அதன் மூலம் SNC-Lavalin சிறு குற்றங்களை ஏற்றுக்கொண்டு, சிறுதொகை தண்டத்தையும் வழங்க, அந்த நிறுவனம் மீதான பெரும் வழக்கு நிறுத்தப்படும்.
.
SNC-Lavalin கடாபி தமையிலான லிபியாவில் சுமார் $140 மில்லியன் பெறுமதியை சட்டவிரோதமாக பெற்று, அதில் ஒரு பகுதியை கடாபிக்கு வழங்கி இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஊழல்கள் காரணமாக World Bank இந்த நிறுவனத்தை 10 வருடங்களுக்கு தடை செய்துள்ளது.

.