கடுமையான 996 கலாச்சாரத்தை கைவிட சீனா அழைப்பு

கடுமையான 996 கலாச்சாரத்தை கைவிட சீனா அழைப்பு

சீனாவின் தொழில்நுட்பம் வேகமாக வளர ஒரு காரணம் அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழிர்களை காலை 9:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை, திங்கள் முதல் சனி வரையிலான 6 தினங்களும் கடமையாற்ற எதிர்பார்ப்பதே. இதை அங்கே 996 என்று அழைப்பர். இவ்வாறு ஊழியரை பிழிவதை நிறுத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த 996 கொள்கை சட்டப்படியானது அல்ல என்றாலும் ஊழியர்கள் மத்தியில் இது படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. சிலவேளைகளில் ஊழியர்கள் தமது வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், உயர்வுகளை பெறவும் தாமாகவே இந்த கொள்கைக்குள் தள்ளி உள்ளனர். அதை நிறுவனங்கள் தடுக்கவேண்டும் என்கிறது அரசு.

சீன அரசு தனது கருத்துக்கு ஆதரவாக ஜெர்மன் அறிஞர் Karl Marx கின் தத்துவத்தையும் பயன்படுத்தி உள்ளது. CPPCC (Committee on Population, Resources and Environment of the Chinese People’s Political Consultative Conference) அமைப்பின் முன்னாள் அதிகாரியே Ling Zhenguo மேற்படி அழைப்பை வெளியிட்டு உள்ளார்.

கடுமையான முதலாளித்துவத்துக்கு எதிரான கருத்தை கொண்ட Karl Marx, ஊழியரை பிழிவது நீண்டகால பயனை வழங்காது என்று கருதினார். ஊழியர்களின் குடும்ப வாழ்க்கை நலமாக இல்லாவிடின் விரைவில் அவர்கள் பயன் அற்றவர்கள் ஆவர் என்கிறது சீன அரசு.