கடைசி நேரத்தில் Brexit இணக்கம்

கடைசி நேரத்தில் Brexit இணக்கம்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான இணக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்த இணக்கம் இருதரப்புக்கும் நியாயமானது என்றுள்ளன. ஆனாலும் இணைக்க விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த இணக்கப்படி பிரித்தானிய பொருட்கள் ஐரோப்பாவில் மேலதிக வரிகள், எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இன்றி விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பிரித்தானிய மீன்பிடி உரிமைகளில் தனது நிலைப்பாட்டை கைவிட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதனால் ஐரோப்பிய மீனவர் பிரித்தானிய கடலில் மீன்பிடிக்க உரிமை கொள்வர். வங்கி விசயத்திலும் பிரித்தானியா விட்டுக்கொடுத்துள்ளது.

இணக்கத்தை நடைமுறை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 14 ஆண்டுகள் தேவை என்றும், பிரித்தானிய 3 ஆண்டுகள் போதும் என்றும் கூறி இருந்தாலும், இறுதியில் 5 ஆண்டுகளுக்கு இணங்கி உள்ளனர்.

இந்த இணக்கம் இருதரப்பு பாராளுமன்றங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படல் அவசியம். பிரித்தானிய டிசம்பர் 30 ம் திகதி கூடி வாக்களிக்கவுள்ளது. இருதரப்பு பாராளுமன்றங்களும் ஆதரித்து வாக்களித்தால் Brexit விசயம் ஒரு முடிவுக்கு வரும்.