கரோனா தொற்றியோர் 30 மில்லியன், இந்தியா ஆபத்தில்

கரோனா தொற்றியோர் 30 மில்லியன், இந்தியா ஆபத்தில்

தற்போது உலக அளவில் 30,065,728 பேர் கரோனா தொற்றி உள்ளனர். உலக அளவில் கரோனாவுக்கு மரணித்தோர் தொகை 944,604 ஆக உள்ளது. தற்போது அமெரிக்காவே அதிக கரோனா தொற்றியோரை கொண்டுள்ளது. அங்கு 6.674 மில்லியன் பேர் கரோனா தொற்றி உள்ளனர். அத்துடன் அங்கு 197,615 பேர் பலியாகியும் உள்ளனர்.

ஆனால் இந்தியாவின் கரோனா தொற்றியோர் தொகை விரைவில் அமெரிக்காவின் கரோனா தொற்றியோர் தொகையை மீறலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் தற்போது 5,118,253 பேர் கரோனா தொற்றி உள்ளனர். இன்று வியாழன் மட்டும் 98,000 பேர் கரோனா தொற்றி உள்ளமை அறியப்பட்டு உள்ளது. அத்துடன் வியாழக்கிழமை மட்டும் 1,132 பேர் கரோனாவுக்கு பலியாகியும்உள்ளனர். மொத்தத்தில் 83,198 இதுவரை இந்தியர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கடந்த 11 நாட்களில் மட்டும் இந்தியாவில் கரோனா தொற்றியோர் தொகை 1 மில்லியனால் அதிகரித்து உள்ளது.

புதன்கிழமை இந்தியா ரஷ்யாவின் 100 மில்லியன் கரோனா தடுப்பு மருந்தை கொள்வனவு செய்ய இணங்கி இருந்தது.