கரோனா பங்கீட்டில் வறிய நாடுகள் மீது தொடரும் வஞ்சம்

கரோனா பங்கீட்டில் வறிய நாடுகள் மீது தொடரும் வஞ்சம்

கரோனா தடுப்பு மருந்து பங்கீட்டில் வறிய நாடுகள் பெரிதும் வஞ்சிக்கப்பட்டு உள்ளன என்பதை தடுப்பது மருந்து பங்கீடு காட்டுகிறது. ஆபிரிக்க நாடுகள் போன்ற வறிய நாடுகளை பின்தள்ளி இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு மருந்தை தம்வசப்படுத்தி உள்ளன.

நமீபியா என்ற நாட்டுக்கு இதுவரை 3,000 தடுப்பு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. இதை COVID apartheid என்று வர்ணித்து உள்ளார் அந்நாட்டு சனாதிபதி.

ஏப்ரல் 20ம் திகதி வரை பிரித்தானியாவில் 48.82% மக்கள் குறைந்தது ஒரு ஊசியையாவது பெற்று உள்ளனர். அமெரிக்காவில் தற்போது 40.2% மக்கள் குறைந்தது ஒரு ஊசியையாவது பெற்று உள்ளனர்.

Niger, தென் சூடான் போன்ற நாடுகளில் 0.01% மக்களே ஒரு ஊசியை பெற்று உல்ளனர். சாம்பியாவில் 0.02% மக்களே ஒரு ஊசியையாவது பெற்று உள்ளனர். நமீபியாவில் 0.18% மக்களே ஒரு ஊசியை பெற்று உள்ளனர்.

இலங்கையில் 4.23% மக்கள் ஒரு ஊசியையாவது பெற்று உள்ளனர். இந்தியாவில் 8.09% பேர் ஒரு ஊசியை பெற்று உள்ளனர். ஆனால் பாகிஸ்தானில் 0.59% மக்களே ஒரு ஊசியை பெற்று உள்ளனர்.

மொத்த கரோனா தடுப்பு மருந்துகளில் 75% மருந்துகள் 10 முன்னணி நாடுகளுக்கு சென்றுள்ளன. உலக அளவில் 6.65% மக்களே ஒரு ஊசியாவது பெற்று உள்ளனர்.